Header Ads

Breaking News
recent

போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து மரணம்!!!!


திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த சுமண பண்டார 54 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (20) அதிகாலை 2.45 மணியளவில் தமது பணியின் போது நெஞ்சு நோவு என மயக்கமடைந்துள்ளார்.

அவரை திருமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர் .

சடலம் திருமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை புரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.