Header Ads

Breaking News
recent

யாழில் மூடப்படும் பாடசாலைகள்!


வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்குள் உள்ளடங்கும் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக தெல்லிப்பழைக் கல்விக் கோட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்துக்கு உள்ளிட்ட 33 பாடசாலைகளும், தெல்லிப்பழை கல்விக் கோட்டத்துக்கு உள்பட்ட 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியின் பின் இந்த இரண்டு கல்விக் கோட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருதனார்மடம் கோரோனா தொற்றுத் கொத்தணியின் முதலாவது நபரின் மகளுக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.