Header Ads

Breaking News
recent

லங்கா பிரிமியர் லீக் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ்!!!


லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 53 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டி ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் மற்றும் கோல் க்ளடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை களத்தடுப்பில் ஈடுபடுமாறு பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் க்ள்டியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
Powered by Blogger.