யாழ் - வாகன விபத்தில் இருவர் பலி மூவர் படு காயம்
யாழ். தென்மராட்சி, நுணாவில் A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த காரின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி கொள்கலன் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 5 வயது சிறுவனும் 30 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த மூவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
