இலங்கையில் அதிகூடிய வயது பெண் மரணம்
களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த இலங்கையின் மிக வயதான பெண் இன்று தனது 117 வயதில் உயிரிழந்தார் .
வேலு பப்பனி என்ற இந்த பெண் நாகொட மருத்துவமனையில் இறந்தார் . இவர் களுத்துரை நெஹன்ன பகுதியை சேர்ந்தவர்.
வேலு பப்பனி 1903 மே 03 அன்று பிறந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் பிபிசி சிங்கள சேவை அவர் குறித்து ஒரு குறுகிய வீடியோ ஆவணப்படம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
