Header Ads

Breaking News
recent

இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்


வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ,

வவுனியா நகரிலிருந்து குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.'

இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
Powered by Blogger.