Header Ads

Breaking News
recent

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க அரசாங்கம் கவனம் : நிரோஷன் பெரேரா


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக முன்னெடுக்க்பட்டுள்ள விசாரணைகள் அரசியல் ரீதியாக அமைந்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக கார்தினல் தெரிவித்துள்ளார். குண்டுதாரிகள் மற்றும் அவர்களை தூண்டிய ஆரம்ப புள்ளிகளை கண்டறியும் வகையில் இந்த விசாரணைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.அரசியல் நோக்கத்திற்காகவே, பாதுகாப்புதுறையை இலக்குவைத்தோ, அரசியல்வாதிகளை இல்குவைத்தோ இதனை முன்னெடுக்காது சம்பந’தப்பட்ட நபர்களை அடையாளம் காண நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். 

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பலரது ஆதரழவயும் பெற்றுக்கொண்டு தற்போது இந்த விசாரணைகளை அவர்களுக்காக திசைத்திருப்ப நடவடிக்கை இடம்பெறுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்சியை பெற்றுக்கொள்வதற்காக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக அமைந்துள்ளது. கத்தோலிக்க தரப்பில் இருந்து ஒருகோரிக்கையை கார்தினல் முன்வைக்கும் போது அரசாங்கம் அதற்கு பதிலளிக்காது அரசியல் காரணங்களுக்காக இதனை திசை திருப்ப வேண்டாமெனவே நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
Powered by Blogger.