வவுனியா சிறைக்கைதி கந்தக்காடு அனுப்பி வைப்பு
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று இனங்காணப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் , ஏனைய கைதிகள் உட்பட அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொவிட் தொற்றுக்குள்ளான கைதி இன்று மதியம் கந்தக்காடு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா சிறைச்சாலையில் தற்போது 139 சிறைக்கைதிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .
கடந்த சனிக்கிழமை 11 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட கைதிக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இன்று கொவிட் 19 தொற்று இனங்காணப்பட்டுள்ளது .
இதையடுத்து அவருடன் தொடர்புபட்டு நெருங்கிப்பழகியவர்களுக்கும் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான கைதி கந்தக்காடு முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .
இதேவேளை வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ஏற்கனவே இனம்காணப்பட்ட தாய், மகள் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களான தந்தை இரு பிள்ளைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.
இதன்போது குடும்பத்தலைவர் வயது 38 , அவருடைய மகள் வயது 8, மகன் வயது 2 ஆகிய மூவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொவிட் தொற்று வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ளது .
இவர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளனர் .
