Header Ads

Breaking News
recent

கிழக்கில் கொரோனா தொற்றினால் நான்காவது மரணம் சற்றுமுன்னர் பதிவு!!!!


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் நான்காவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.


கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் நபரே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் எமது MAX தமிழ் செய்திப்பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தபோது “இன்று 54 வயதுடைய அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பொது மகன் நெஞ்சுவலி காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ECG பரிசோதனையைத் தொடர்ந்து அவருக்கு மரடைப்பு வந்திருந்தமை அடையாளப்படுத்தப்பட்டு அன்டிஜென்ட் பரிசோதனை செய்த பொழுது குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கல்முனை பிராந்தியத்தில் இதுவரை நான்காவது கொரோனா மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் ஜீ.சுகுணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.