திருகோணமலையை தொடர்ந்து கிண்ணியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !!!!
திருகோணமலை கிண்ணியா MOH பிரிவில் எடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேறுக்கு அமைய நேற்று இரவு இரண்டு பேருக்கு PCR பரிசோதனை முடிவுகள் Positive என தெரியவந்துள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார் .
மேலும் தற்போது அவர்களின் குடும்பத்தினாருக்கு Rapid Antigen testing ரேபிட் அன்டிஜன் பரிசோதணையின் பிரகாரம் இன்று இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்கள் கொழும்பில் இருந்து கிண்ணியாவிற்கு வருகை தந்த அண்ணல்நகர் மற்றும் ஹிஜ்ரா வீதி போன்ற பகுதிகளில் வசித்து வரும் 24 மற்றும் 47 வயதுடைய இருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்..ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அவரது குடும்ப உறுப்பினர் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
