Covid-19 நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு : ஹொரவப்பொத்தானை பொது சுகாதார பரிசோதகர்
ஹொரவப்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிட்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவு 147 ரத்தமை, சுகந்தகம கிராமங்களில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட covid-19 நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (23) சுஹந்தகம கேட்போர் கூடத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி அமைப்பின் உத்தியோகத்தர் S. புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வுக்கு
ஹொரவப்பொத்தானை பொது சுகாதார பரிசோதகர் Mr.பண்டார கலந்து கொண்டு கொரோனா வைரசுக்கு மத்தியில் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற விடயங்களை தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் ஹொரவப்பொத்தானை துட்டுவெவெ இல் ஏற்கனவே ஒருவர் covid 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்புடையய 44பேர்களுக்கு PCR பரிசோதனைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே நாம் மிகுந்த அவதானமாக செயட்பட வேண்டும்.
மேலும் கிராம மட்டங்களில் கொரோனா தொடர்பான குழுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக எனைய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஹொரவப்பொத்தானை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு கிராம முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.

