Header Ads

Breaking News
recent

O/L பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.