Header Ads

Breaking News
recent

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் 150 m.m க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் : வளிமண்டலவியல் திணைக்களம்!!!


இலங்கைக்கு அண்மையாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Powered by Blogger.