Header Ads

Breaking News
recent

15 வயதான சிறுமியினை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன் கைது

 பெற்றோரிற்கு தூக்க மாத்திரை கொடுத்து 15 வயதான சிறுமி ஒருவரை சீரழித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் அத்துருகிரிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆபாச காணொளியை வைத்து 02 வருடங்களாக மிரட்டிவந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளைில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் சிறுமி கருவுறுதலை தடுக்கும் மருந்தினை அருந்துவதனை அறிந்துக்கொண்ட தந்தை இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த பொழுது உண்மை தகவல்களை அறிந்து கொண்டுள்ளார்.

அதன்பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சந்தேக நபரையும் தனது மகளையும் வன்மையாக கண்டித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தேக நபர் மற்றுமொரு நாளில் பாதிக்கப்பட்ட பெண்ணிண் தந்தை மற்றும் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு சிறுமியை சீரழித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் , பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக களுபோவிலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Powered by Blogger.