Header Ads

Breaking News
recent

ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு. pfizer – bioNtech நிறுவனம்!


இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக, pfizer – bioNtech நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 1 தசம் 3 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளையே வழங்கமுடியும் என pfizer – bioNtech நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அளவு கொரேனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்காக Germany – Marburg நகரில் புதிய தொழிற்சாலை ஒன்றை அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக pfizer – bioNtech நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிதாக தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கான மருந்துக் குப்பியின் மூலம் 6 பேருக்கு தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம், அதிக அளவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க முடியும் எனவும், pfizer – bioNtech நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.