ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை பிரஜைகள் மூவருக்கு - அமெரிக்காவில் வழக்கு தாக்கல்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை பிரஜைகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டில் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டியமை, அதற்கு தேவையான பொருட்களை வழங்கியமை உள்ளிட்ட பயங்கரவாத குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் அறிவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் ISIS அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுடைய குழுவே 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதாவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 05 அமெரிக்க பிரஜைகள் அடங்கலாக 268 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.