Header Ads

Breaking News
recent

மருதமுனையில் கரைவலை தோணிக்கு சுமார் 5000 சூரை மீன்கள்!!!!

மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) கரைவலை தோணிகள் இரண்டிற்ற்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சூரை மீன்கள் பிடிபட்டன. சூரை மீன் ஒன்றின் நிறை மூன்று அல்லது மூன்றரை கிலோ எடை உடையதாக காணப்பட்டன.

இதனால் ஒரு சூரை மீன் 600 ரூபாய் தொடக்கம் 800 ரூபாய்கள் வரை மிகவும் மலிவான விலையில் குறித்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டன.

பொதுமக்கள் குறைந்த விலையில் மீன்களை கொள்வனவு செய்து கொண்டதுடன் கடற்கரை மற்றும் பிரதான வீதிகளை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

குறித்த கரைவலை மீன்பிடியாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு இந்த மீன்களை விற்பனை செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.