Header Ads

Breaking News
recent

பாவனைக்குதவாத தேயிலை உடன் 7 பேர் கைது!!!



சீதுவ, கொடுகொட பகுதியில் 29 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் 7 பேர் கைது செய்யுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (18) மாலை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்,

இலங்கை தேயிலை என்று பெயர் குறிக்கப்பட்ட குறித்த கழிவுத் தேயிலை தொகை மத்திய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கழிவுத் தேயிலையை எடுத்து செல்வதற்காக தயார் படுத்தப்பட்டிருந்த கன்டேனர் மற்றும் டிரக் ரக வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Powered by Blogger.