ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்!!!
செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் இன்று கரடியனாறு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த தனியார் ஊடகமொன்றில் கடமைபுரியம் ஊடகவியலாளரை சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அச்சுறுத்தி வீடியோ எடுக்க விடாது தடுத்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர் மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார்.
