Header Ads

Breaking News
recent

குச்சவெளி பிரதேசத்தில் தற்காலிகமாக மாடறுக்க தடை : குச்சவெளி பிரதேச சபை தவிசாளர்!!!!


குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை இறைச்சிக்காக மாடு அறுத்து விற்பனை செய்யவது தடைசெய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஜனாப் A.P.முபாரக் அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ...

நாட்டின் சில பகுதிகளில் அன்மை காலமாக மாடுகளுக்கு ஏற்பட்டுவருகின்ற நோய்த்தாக்கம் காரணமாக மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இறைச்சிக்காக மாடு அறுத்து விற்பனை செய்யவது மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜனாப் ஏ.பீ.முபாறக் அவர்கள் இந்த அறிவித்தல் விடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குச்சவெளி பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை மிக அவதானமாக கண்காணிக்க வேண்டும் என்றும் தவிசாளர் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.