Header Ads

Breaking News
recent

பாணந்துறை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!!!


பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் நபரொருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்கேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Powered by Blogger.