சற்று முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு!!!!
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட Boeing 737 ரகத்தைச் சேர்ந்த The Sriwijaya Air எனும் பயணிகள் விமானமொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளநிலையில் அதன் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாத தெரிவிக்கப்படுகின்றது .
விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் அடிக்கும் குறைவான உயரத்தில் பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக, Flightradar24.com இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விமானத்தில் 50 க்கு மேற்பட்ட பயணிகள் மற்றும் விமானக் குழவினர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேஷிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


