Header Ads

Breaking News
recent

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் பதவியேற்பு!!!


எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன் நிலையில் பதவியேற்றார். 

எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அத்துரலியே ரத்ன தேரர், வர்த்தமானியில் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய சார்பிலும், 2010 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலும், அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.