கொவிட் தடுப்பூசியை வழங்க ஏன் இவர்கள் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டார்கள்?

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் முதல் ஊசிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இராணுவத்தினருக்கு செலுத்தப்பட்டது.
குறித்த 3 இராணுவத்தினருக்கும் ஏன் முன்னுரிமை வழங்கப்பட்டது என்ற கேள்வி பலரது மனதில் எழுந்திருக்கக்கூடும்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தபோது தெரியவருவது
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்திருந்த காலப் பகுதியில் சீனாவின் ஹீவான் நகரிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகுதி மாணவர்கள் முதல் தடவையாக அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு வருகைத் தந்த மாணவர்களை பொறுப்பேற்று, அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுகாதார வைத்திய நிபுணர் கேணல் சவின் சேமகேயிற்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தொற்றினால் விமான நிலையம் மூடப்பட்ட தருணம் முதல் இன்று வரை விமான நிலையத்திற்கு வருகைத் தருவோரை பொறுப்பேற்று, அவர்களில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டு, இலங்கைக்கு வருகைத் தருவோரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து சென்று கடும் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட் பிரிவின் பிரிகேடியர் லால் விஜேதுங்கவிற்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இலங்கையில் முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட கொரோனா மத்திய நிலையமான பூனானை முகாம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களுடன் போராடி, அவர்களை குணப்படுத்தும் பாரிய சேவையை வழங்கி வரும் இராணுவத்தின் வைத்தியர் பசிந்து பெரேராவிற்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இவர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.