Header Ads

Breaking News
recent

விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்



பதினொரு விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை  பட்டியனூர் சந்தியில் இடம் பெற்றது.



வீதியைப் புனரமைப்புச் செய்து தருமாறும், மணல் அகழ் வைத்தடை செய்வதுடன், மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்க ளை நிறுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
2008 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் விவசாயிகளின் காணி அபகரிக்கப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட்டது.

இவ்வீதியினால் விவசாயிகளுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தமக்கான வீதி புனரமைக்கப்படுகிறது என்று எண்ணியிருந்த தமக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.



பட்டியனூர், கண்டக்காடு, கிரான் முதலான . பகுதிகளுக்குச் செல்லும் இவ் வீதி மண் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்கள் இவ்வீதியால் சென்று சேதப்படுத்துவதோடு போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு பெரும் அசெளகரியங்களை உண்டு பண்ணுவதாகவும் அதனால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் , கர்ப்பிணித் தாய்மார்கள், விவசாயிகள், வியாபாரிகள் பலர் இவ்வீதி சேதமடைந்துள்ளதனால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வீதியைப் புனரமைப்புச் செய்து தருமாறு பிரதேச செயலாளரிடம் பலதடவைகள் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



அத்துடன் விவசாயிகள் தமது விவசாய உற்பத்திப் பொருட்களை விவசாயம் செய்கைப் பண்ணப்பட்ட இடத்திருந்து வெளியில் கொண்டு வருவதற்கு கொடுக்கப்படுகின்ற கூலி உற்பத்திப் பொருட்களை வாங்குபவர்களின் விலையிலும் பன்மடங்காகும் எனத்தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.