மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம்!!!!
(மதவாச்சி நிருபர்)
கொழும்பு மன்னார் பிரதான வீதியில் மதவாச்சி மஹாசியம்பலகஸ்கட எனும் பிரதேசத்தில் இன்று 17 இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் தெரியவருவதாவது
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பலத்த காயங்களுடன் விபத்துக்குள்ளானவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்றக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


