Header Ads

Breaking News
recent

இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு!!!

இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கொவிட் - 19 தடுப்பூசிகள் நாளை (27) வியாழக்கிழமை கொழும்பினை வந்தடையவுள்ளது என கொவிட் - 19 தடுப்பூசி தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

இந்த தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று சுகாதார அமைச்சிடம் கையளிப்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.

இந்த தடுப்பூசி ஏற்றல் நடடிக்கை முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படும் எனவும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
Powered by Blogger.