Header Ads

Breaking News
recent

திருக்கோணமலை மொத்த மீன் சந்தை நகரசபைக்கு கீழ் செயல்பட வேண்டும் : நகர சபை உறுப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!!


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொத்த மீன் சந்தை நகரசபைக்கு கீழ் செயல்பட வேண்டும் அதன் வரிப்பணம் இந்த நகர மக்களின் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டும் என கோரி திருகோணமலை நகரசபை உறுப்பினர் எஸ்.சிவகுமார் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருகோணமலை நகர சபைக்கு முன்னால் இன்று (29) காலை 7:15 மணி அளவில் இவ்வுண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு தமது அறிக்கை ஒன்றினையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை நகரம் பல்லின சமூகம் சேர்ந்து வாழும் பகுதியாகும்.

பலதரப்பட்ட அபிவிருத்திகளின் தேவைப்பாடு அதிகமாகவே உள்ளது.

நகர சபையும் மக்களின் வரிப்பணத்தை கொண்டே அபிவிருத்திகளை செய்து வருகின்றது. உள்ளுராட்சி சட்டப்படி ஒரு நகரில் இருக்கும் சந்தைகள் அந்தந்த நகரசபையின் கீழோ அல்லது பிரதேச சபையின் கீழோ செயல்பட வேண்டும்.

திருகோணமலை நகர மணிக்கூட்டு அருகே உள்ள அதிக வருமானம் பெறும் மொத்த மீன் சந்தை 2012ஆம் ஆண்டு தொடக்கம் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு கீழ் செயல்படுகின்றது.2016ஆம் ஆண்டு வரை 40 வீதம் நகரசபைக்கு செலுத்தப்பட்ட வரி அதன் பின் கிடைக்கவில்லை. மீன் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள் கடற்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு வரிப்பணம் செலுத்துவதினால் நகரசபைக்கு அந்த வரிப் பணம் கிடைப்பதில்லை.அதனால் நகர அபிவிருத்தியை மந்தம் அடையச் செய்கின்றது.

இந்நிலை மாறவேண்டும் நகர சபையின் கீழ் மொத்த மீன் சந்தை கொண்டுவரப்பட வேண்டும் அதன் வரிப்பணம் நகரசபைக்கு செலுத்தப்பட வேண்டும் இது சம்பந்தமாக என்னால் சபை நடவடிக்கைகளில் பிரேரணை கொண்டுவரப்படும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மனு அனுப்பப்படும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் விளைவாகவே இந்த அடையாள உண்ணாவிரதம்!

இன்றும் மொத்த மீன் சந்தை சம்பந்தமான அனைவருக்கும் சந்தை தொடர்பான பிரச்சினைக்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்க உள்ளோம்.

நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது அகிம்சை போராட்டம் தொடரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரிப் பணம் செலுத்தாத மீன் சந்தை கழிவுகளை மக்களின் வரிப்பணத்தில் எவ்வாறு அகற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Powered by Blogger.