Header Ads

Breaking News
recent

சற்றுமுன் கொரோனா தொற்றினால் கிழக்கில் மேலும் ஒருவர் மரணம்!!!


நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாவிதவன்வெளி மத்திய முகாமைச்சேர்ந்த பெண்ணொருவர் அம்பாறை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்டி பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

இதுவரை கிழக்கில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

கிழக்கு மகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1429 ஆக அதிகரித்துள்ளது
Powered by Blogger.