அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கிழக்கிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!!!
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மட்டக்களப்பு – காந்திபூங்கா முன்றலில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அத்துடன், அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதானது, மனித உரிமை மீறலாகும் எனவும், போராட்டக்காரர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம், இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.


