Header Ads

Breaking News
recent

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு...!



வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால் காலை அப்பகுதி முடக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கிராமம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன் போது ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து வவுனியா வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.