Header Ads

Breaking News
recent

புல்மோட்டையில் மோட்டார் குண்டு இரண்டு மீட்பு!!!


(பதுர்தீன் சியானா)

திருகோணமலை-புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த மோட்டார் குண்டு இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (27) மாலை மோட்டார் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

60 மில்லி மீட்டர் கொண்ட இம் மோட்டார் குண்டு யுத்த காலத்தின் போது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அதனை வெடிக்க வைப்பதற்காக திருகோணமலை நீதிமன்றத்தின் அனுமதியை இன்று கோரவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

பல வருடகாலமாக காட்டுப்பகுதியில் காணப்பட்ட இம்மோட்டார் குண்டை பாதுகாக்கும் நோக்கில் பொலிசார் நேற்று மாலை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.