சற்றுமுன் கிண்ணியா திருமலை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து : மூவர் படுகாயம்
(நிலாவெளி நிருபர் - ஆசாத்)
திருகோணமலை கிண்ணியா பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்தியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது
கிண்ணியாவிலிருந்து திகோணமலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று நாச்சிக்குடா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கணத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும். காயமடைந்தவர்கள் கிண்ணியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் விபத்துக்குள்ளான சாரதி திருகோணமலை தில்லைநகர் பகுதியை சேர்த்தவர் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணையை சீனக்குடா பொலிசார் மேற்றக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது



