நாளை முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ள வைத்தியசாலைகள் - பட்டியல் இணைப்பு!!
அடுத்த நான்கு நாட்களுக்குள் 5 இலட்சம் தடுப்பூசிகளையும் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவித அச்சமும் இல்லாது தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என அரசாங்கமும், சுகாதார அமைச்சும், பணியகமும் முழுமையான வாக்குறுதி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவிலிருந்து இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை நாளை தொடக்கம் ஆறு வைத்தியசாலைகளில் வழங்கப்படுகிறது.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராகம வைத்தியசாலை, களுபோவிலை வைத்தியசாலை, அங்கொடை ஐ.டி.ச் வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை என ஆறு வைத்தியசாலைகளில் நாளை தினம் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
