ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - மன்னார்
கடந்த முப்பதாம் திகதி கொழும்பு பகுதியில் இருந்து மன்னார் வருகை தந்து எருக்கலம் பிட்டி பகுதியில் தனிமை படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கே நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸ்மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகதகர்களினால் எருக்கலம் பிட்டி பகுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு நேற்றைய முன் தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே குறித்த குடும்பத்தினரை பாதுகாப்பான முறையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது