Header Ads

Breaking News
recent

பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒருவர் பலி



பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முக்கச்சக்கரவண்டியொன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட இடத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.