Header Ads

Breaking News
recent

இந்த நாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு PCR அறிக்கை தேவையில்லை!!!


பாகிஸ்தானுக்கு வரும் இலங்கையர்கள், நாட்டிற்கு வரும்போது பி.சி.ஆர். சோதனை அறிக்கையை முன்வைக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிவில் ஏவியேஷன் ஆணையம் வெளியிட்டுள்ள உள்வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட பயண ஆலோசனையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

பயணத்திற்கு முன்னர் கொவிட்-19 சோதனைக்கு வெவ்வேறு வழிமுறைகளுடன் பாகிஸ்தானின் சிவில் ஏவியேஷன் ஆணையம் நாடுகளை மூன்று பிரிவுகளாக (A, B மற்றும் C) பிரித்துள்ளது.

A பிரிவில் – அவுஸ்திரேலியா, சீனா, ஈராக், நியூசிலாந்து, கட்டார், ஐஸ்லாந்து, இலங்கை, மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 24 நாடுகள் உள்ளன.

C பிரிவில் – தென்னாபிரிக்கா, பிரிட்டன், பிரேஸில், அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் உள்ளன.

B பிரிவில் – ஏ மற்றும் சி பிரிவில் வராத அனைத்து நாடுகளும் அடங்கும்.

A பிரிவில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை வழங்கத் தேவையில்லை. அதேசமயம் B பிரிவில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு முன்னர் 72 மணிநேரத்திற்குள் எடுத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

C பிரிவில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாகிஸ்தான் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்தின் முடிவுகளால் வழிநடத்தப்படுபவர்கள் மாத்திரேமே அனுமதிக்கப்படுவார்கள்.
Powered by Blogger.