Header Ads

Breaking News
recent

கொரோனா அகோரம் - மேலும் ஐவருக்கு தொற்று உறுதி

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த ஐவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.



வவுனியா பட்டாணிசூர் பகுதியில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதுடன், அதேபகுதியை சேர்ந்த கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் பட்டானிச்சூர் கிராமம் கடந்த இருதினங்களாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரிசோதனையின் அடிப்படையில் நேற்று மாலை கிடைக்கபெற்ற முடிவுகளின் அடிப்படையில் 5 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.