வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று
ஜனவரி 3 கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
👉1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
👉1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை.
👉1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.
👉1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.
👉1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
👉1777 – பிரின்ஸ்டன் சமரில் அமெரிக்கத் தளபதி சியார்ச் வாசிங்டன் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவைத் தோற்கடித்தார்.
👉1815 – ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
👉1833 – போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.
👉1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
👉1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.
👉1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
