இந்திய மீனவர்களின் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன!!!!!

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வரினதும் சடலங்களை இன்று அந்நாட்டிற்கு ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோர காவல்படையினரின் கப்பலொன்றின் மூலம் குறித்த சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இந்திய கடலோர காவல்படை கப்பலான அதுல்யாவிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக்க இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 18 ஆம் திகதி குறித்த இந்திய மீனவர்களின் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
