Header Ads

Breaking News
recent

முடக்கப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிலோன் மீடியா போரம்!!!!

(எஸ்.அஷ்ரப்கான்)
கடந்த 19 நாட்களாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கும் கல்முனைப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு சிலோன் மீடியா போரத்தினால் உலருணவுப் பொதிகள் வீடு வீடாகச்சென்று நேற்று (15) மாலை வழங்கி வைக்கப்பட்டது.

சிலோன் மீடியா போரத்தின் இரண்டாம் கட்ட இந்நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா, பிரதித்தலைவர் எஸ். அஸ்ஃரப்கான் உட்பட செயற்குழு உறுப்பினர்களான எம்.பி.எம்.றிம்ஸான், எம்.என்.எம்.அப்ராஸ் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர். 

முதலாம் கட்ட நிவாரணப் பணிகளை கடந்த மாதம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வமைப்பு இவ்வாறான சேவைகளை ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாது, சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.