Header Ads

Breaking News
recent

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது !!!




நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.

இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

Powered by Blogger.