கைத்தறி நெசவுத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்!!!!
குறித்த கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காலை 10.00 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கைத்தறி நெசவுப்பொருட்களை பார்வையிட்டு கொள்வனவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
உள்ளுர் சமூக பண்பாடுகள் மற்றும் கைத்தொழில் முனைவினை வலுப்படுத்தம் முகமாக இடம்பெற்ற இக் கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்தில் கரைதுறைப்பற்று, மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலகங்களிற்குட்பட்ட வடமாகாணத்திலுள்ள கைத்தறி நெசவு ஆலைகளின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
உள்ளுர் கைத்தறி நெசவுத் துணிகளில் இருந்து பல்வகைப்பட்ட பண்பாட்டுப் பொருட்கள் மற்றும் பன்புல் பாய், மண்சிலைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.
உள்ளுர் கைத்தறி நெசவுப் பயன்பாட்டு பண்பாட்டை வலுப்படுத்தும் முகமாக இவ் முன்னெடுப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



