Header Ads

Breaking News
recent

சலூன் தொழில் செய்வோர்களுக்கான Covid-19 சம்மந்தமாக விழிப்புணர்வு!!


(கிண்ணியா நிருபர் முனீஸ்) 
கிண்ணியா பிரதேச சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட சலூன் தொழில் செய்வோர்களுக்கான Covid-19 சம்மந்தமாக விழிப்புணர்வு கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் தலைமயில், இன்று (2) நடைபெற்றது. 


குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அலுவலகப் பிரிவில் சிகை அலங்கார நிலையங்களைத் திறப்பது சம்பந்தமாக, சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று, 


குறிஞ்சாக்கேணி பிரதேச வைத்திய அதிகாரி Dr.AMM.அஜித் அவர்களின் வழிகாட்டலின் கீழ், நடைபெற்ற இக் கலந்துரையாடலில், பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


1. சிகை அலங்காரத்திற்கு செல்பவர்கள் தங்களுக்குரிய போர்வையை எடுத்துச் செல்ல வேண்டும்.


2. முகக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும்


3. தாடி, மீசை full service செய்யப்பட மாட்டாது.


4. சிகை அலங்காரம் செய்பவர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.


5. நீண்ட நேரம் காத்திருந்து சிகை அலங்காரம் செய்யமுடியாது உரிய நேரத்திற்கு ஒவ்வொருவராக வருகை தரவேண்டும்.


6. ஒவ்வொரு சேவையிலும் தொற்று நீக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.


மேற்படி நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனும் தீர்மானமும் எடுக்கப்பட்டது.


இந்தக் கலந்துரையாடலில் சுகாதார பரிசோதகர் ஆரிப் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது



Powered by Blogger.