Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!!



மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் 15 மாணவர்கள் உட்பட ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விபயிலும் மாணவர்கள் இவ்வாறு தொற்றுக்குள்ளானமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பஸ்பாகே கோரளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள சுகாதார பணியாளர்கள் ஆறுபேர் உட்பட 22 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடைய 112 பேருக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பஸ்பாகே கோரளை பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மொரவக்க பிட்டபெத்தர பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்ற நால்வருக்கு முன்னதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளில் மணமகன் உட்பட மேலும் எட்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.