5 ஆண்களின் உயிரை பறித்த கொரோனா : நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரிப்பு !!!!

(Haseem Sajeeth - Irakkamam)
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொட்டகலை பிரதேசத்தைசேர்ந்த 63 வயதுடைய ஆண் மற்றும் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் மேலும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
