Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை அண்மித்தது!!!!!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 506 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 72 ஆயிரத்து 566 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 930 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Powered by Blogger.