Header Ads

Breaking News
recent

மியன்மாரின் (முன்னாள் பர்மா) ஆளுங் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி, அந்நாட்டு ஜனாதிபதி வின் மின்ற் உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள்சிறைபிடிக்கப்பட்டுளார்கள்!!


மியன்மாரின் (முன்னாள் பர்மா) ஆளுங் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி, அந்நாட்டு ஜனாதிபதி வின் மின்ற் உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அங்கு இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளதோடு, ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் லைங் (Min Aung Hlaing) எதிர்வரும் ஒரு வருடத்திற்கு நாட்டை ஆட்சி செய்வார் என, மியன்மார் இராணுவ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
Powered by Blogger.