Header Ads

Breaking News
recent

அடக்கம் செய்வதற்கான இடத்தை கண்டறிவது சவால் மிக்கதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்!!!!



கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டி வரைவு தயாரிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

குறித்த வழிகாட்டல்களில் சேர்க்கப்பட்டுள்ள அடக்கம் செய்வதற்கான இடத்தை கண்டறிவது சவால் மிக்கதெனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அடக்கம் செய்வதற்கன இடம் அடையாளம் காணப்பட்ட பின்னர் சுற்றுநிரூபம் வெளியிடப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
Powered by Blogger.