Header Ads

Breaking News
recent

லிங்கநகர் பிரதேசத்தில் இரு தொற்றாளர்கள் உறுதி!!


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உற்பட்ட லிங்கநகர் பிரதேசத்தில் இன்று இரு கொவிட்19 தொற்று உறுதியானதாத பட்டினமும் சூழலும் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன

நேற்று நகர பொது சுகாதார வைத்திய பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஐன் பரிசோதனையில் லிங்கநகர் பிரசேசத்தில் கொவிட்19 தொற்று உறுதியானதை அடுத்து குறித்த தொற்றாளரின் தொடர்பை பேணிய நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எட்டு அன்டிஜன் மற்றும் ஆறு பீ சி ஆர் பரிசோதனைகளில் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொவிட்19 உறுதி செய்யப்பட்டுள்ளனர் என பட்டினமும் சூழலும் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அடையாளம் காணப்பட்ட இரு கொவிட்19 தொற்றாளர்களை பொருத்தமான கொரோனா மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் ஈடுபடுகின்றது .
Powered by Blogger.